கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியின் முன்னோடிகளை கவுரவிக்கும் விழா
பவள விழாவின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக நடைபெற்ற இதில்,கல்லூரியின் முதல் பேட்ஜ் பட்டதாரிகள் கவுரவிப்பு
கோவை பி.எஸ்.ஜி.குழுமங்களின் பவள விழாவை பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஒருங்கிணைத்த முன்னோடிகளுக்கான பாராட்டு விழா (Felicitation Function of the Forerunners) பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது…
இதில்,கடந்த 1955 ஆம் ஆண்டு பி.இ இயந்திரப் பொறியியலில் முதல் பட்டதாரியும், புது தில்லியின் இந்திய காற்றாலை மின் சக்தி சங்கத்தின் முன்னாள் தலைவருமான முனைவர் கே.கஸ்தூரிரங்கையன் தலைமை விருந்தினராகவும், 1977 ஆம் ஆண்டு பி.இ. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியும், கோயம்புத்தூரின் மேக்னா எலக்ட்ரோகாஸ்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான நா.கிருஷ்ணசாம்ராஜ் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உலகளாவிய பூ.சா.கோ தொழில்நுட்ப கல்லூரியின் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் நீண்டகால சேவை ஆற்றிய முன்னாள் மாணவ சங்க ,நிர்வாகிகள்,உறுப்பினர்கள் உள்ளிட்ட கடந்த கால மற்றும் தற்போதைய முன்னாள் மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்புரை ஆற்றிய விழாவில், முன்னாள் மாணவர் சங்கத்தின் புரவலரும் பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வருமான முனைவர் கே.பிரகாசன் தலைமை உரையாற்றினார்.
விழாவில், கல்லூரியின் 1955-ஆம் ஆண்டு முதல் பேட்ச் (Batch) பட்டதாரிகளை பூ.சா.கோ சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் கவுரவித்தார்..
இதே போல கடந்த கால மற்றும் தற்போதைய முன்னாள் மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்களும் நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பூ.சா.கோ தொழில்நுட்ப முன்னாள் மாணவர்சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் மா.அரசு இறுதியில் நன்றியுரை ஆற்றினார்..,