காஞ்சிபுரம்
தமிழகத்திலிருந்து இரண்டு புத்த பிக்குகள் வணக்கத்துக்குரிய புத்தபிரகாஷ் காஞ்சிபுரம் மற்றும் வணக்கத்திற்குரிய ஜெயசீலர் திருப்பத்தூர் ஆகிய இருவரும் புத்த பிக்குகளுக்கான பயிற்சி. ( உபசம்பதா) பெறுவதற்கு இலங்கைக்கு சென்று 10 மாதங்கள் வெற்றிகரமாக பயிற்சி முடித்து காஞ்சிபுரம் திரும்பினார்கள்.
அவர்களுக்கு காஞ்சி புத்த விகார் சார்பாக அதன் தலைவர் ஆர் .திருநாவுக்கரசு மற்றும் செயலாளர் ஜி நாகராஜன் RTD .DSP ஆகிய தலைமையில் வரும் வழியெங்கும் மலர்கள் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது .
ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டபின் காஞ்சி புத்த விகாரில் சிறப்பு வழிபாடும் தம்ம உபதேசமும் நடைபெற்றது பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்