தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார் ஆனால் நாலரை ஆண்டு காலம் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை பணியாளர்களை நிரந்தரம் ஆக்கவில்லை காலி பணியிடங்கள் நிரப்ப வில்லை இதனை அடுத்து கடந்த மூன்று தினங்களாக தமிழகம் முழுவதும் தொகுப்பு புதிய செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளே தொகுப்பூதியசெவிலியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மூன்றாவது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தொகுப்பூதிய செவிலியர்கள் கூறுகையில் 10 வருடங்களாக நாங்கள் தொகுப்பூதிய செவிலியராக பணியாற்றி வருகிறோம் சுகாதாரத்துறை அமைச்சர் காலிப் பணியிடங்கள் இல்லை என்று கூறுகிறார் காலி பணியிடங்களை நீங்கள் கூறவில்லை அரசு மருத்துவமனையில் கட்டிடங்கள் தான் உயர்கிறது எங்களுடைய வாழ்வாதாரம் உயரவில்லை செவிலியர்கள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. 2023 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தமிழகத்தில் 18 ஆயிரம் செவிலியர்கள் காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி 356 தொகுப்புதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது
ஆனால் முதலமைச்சர் இன்று வரை எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை கொரோனா காலகட்டத்தில் எங்களது பணியை முதலமைச்சர் பாராட்டினார் ஆனால் நாங்கள் தற்போது தெருவில் வந்து போராடுகிறோம் தமிழக முதல்வர் கண்டு கொள்ளவில்லை. தமிழக முதலமைச்சர் துணை முதலமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் எங்களது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது
ஆனால் செவிலியர்கள் பணியிடம் நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எங்களுடைய காத்திருப்பு போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும். சுகாதாரத் துறை அமைச்சர் போராட்டம் எங்கும் நடைபெறவில்லை என்று கூறுகிறார். சுகாதாரத் துறை அமைச்சர் தொகுப்பு புதிய செவிலியர்கள் பணிக்கு திரும்பி விட்டார்கள் என்று கூறினார் நாங்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை தமிழ்நாடு முழுவதும் 8000 பேர்