திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றாத தி.மு.க அரசு : முருக பக்தர் தற்கொலை – கோவையில் புஷ்பாஞ்சலி செலுத்திய இந்து முன்னணியினர் ….!!!
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பை அவமதித்து அதை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசால் மனவேதனை அடைந்து மதுரையில் பூர்ணசந்திரன் தீக்குளித்து இறந்தார் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. இந்நிலையில் நேற்று அமாவாசை நாளில் பூரண சந்திரன் மறைந்து விட்டார்.
உயிரிழந்த பூர்ண சந்திரனுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கோவை, சிவானந்த காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள மாவீரன் சசிகுமார் திடலில் தீபம் ஏற்றி புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
வீரவணக்கம் வீரவணக்கம் பூரண சந்திரனுக்கு வீரவணக்கம் என கோஷங்கள் எழுப்பி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட துணை தலைவர் மணி நகர தலைவர் சந்தோஷ் நகரப் பொதுச் செயலாளர் சங்கர் இந்து வியாபாரி சங்கம் ரத்தினபுரி நகர் தலைவர் பல்சர் ராஜன் மற்றும் நகர பொறுப்பாளர்கள் நவீன் மணி மற்றும் கிளை மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்