ஆதித்யா மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பாக புதுமை, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்த சர்வதேச மாநாடு

இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் சர்வதேச பல்கலைகழக அறிஞர்கள் பங்கேற்பு

கோவை ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் ஒரு அங்கமான ஆதித்யா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மெண்ட் “புதுமை, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிலையான எதிர்காலத்திற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு கல்லூரி வளாகத்தில் துவங்கியது..

பிரான்சு,தைவான்,மலேசியா,கோலாலம்பூர் ஆகிய இடங்களில் உள்ள புகழ் பெற்ற பல்கலைகழகங்களுடன் இணைந்து நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில்,
ஆதித்யா நிறுவனங்களின் தலைவர் பொறியாளர் சுகுமாரன் தலைமை தாங்கி பேசினார்..

அப்போது பேசிய அவர், நிலையான உலக எதிர்காலத்தை உருவாக்குவதில் புதுமை, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மையின் அவசியம் குறித்து உரையாற்றினார்..

தொடக்க அமர்வின் முதன்மை விருந்தினராக ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிளஸ்டர் பல்கலைகழக கௌரவ துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கே. எஸ். சந்திரசேகர் மற்றும் மாநாட்டின் நிறைவு அமர்வின் முதன்மை விருந்தினராக திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் புறநகர் கல்வி நிலைய பல்கலைகழகத்தின் -கௌரவ துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பஞ்சநாதம் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டின் கல்வி முக்கியத்துவத்தை எடுத்து கூறினர்..

இதில்,

ஆதித்யா கல்லூரி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர்கள் பிரவீன் குமார் மற்றும் டாக்டர் ஸ்ரீநிதி பிரவீன் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் டீன் டாக்டர் சரவணகுமார்,கொச்சின் ,சின்மயா விஷ்வா வித்யா பீடம் பல்கலைகழக பதிவாளர் டாக்டர் ராஜேந்திரன்,அமெரிக்கா ராபர்ட் கவேலியர் பல்கலைகழக முதன்மை கல்வி அலுவலர் டாக்டர் சுஹேல் மியா,மலேசியா செயின்ஸ் பல்கலைகழ சர்வதேச ஆய்வுகள் பேராசிரியர் டாக்டர் சங்கர் செல்லையா உள்ளிட்ட பல சிறப்பு அறிஞர்கள் முக்கிய உரைகளை வழங்கினர்.

இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 24 அமர்வு தலைவர்கள் தொழில்நுட்ப அமர்வுகளை வழிநடத்தினர். மேலும் 400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி, மாநாட்டின் சர்வதேச பரவலையும் கல்வி ஆழத்தையும் வெளிப்படுத்தினர்.

கருத்தரங்கில் ஆதித்யா மேலாண்மை கல்லூரி பேராசிரியர் மற்றும் இயக்குநர் டாக்டர் சுந்தரபாண்டியன் நடராஜன் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் விக்ரமன், முதல்வர் டாக்டர் சோமசுந்தரேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் விசாகமூர்த்தி, லட்சுமிகாந்த், கிருஷ்ணவேணி, வித்யா காவ்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *