திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில் பாகம் 33- க்கான என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன் தலைமை வகித்தார், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி, பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியின் பார்வையாளர் ஜெகவீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் தேர்தலில் பணியாற்றுவது குறித்தும், வாக்குச்சாவடியினை வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றுவது குறித்தும் கட்சியினரிடையே பேசினார்.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் க.செல்வம், வசந்தி பாஸ்கர், ரம்ஜான் பீவி சிவராஜ், செல்வமணி, மாவட்ட பிரதிநிதி எஸ்.ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதி சிங்குதெரு எஸ்.ஆர்.ராஜேஷ், 14- வது வார்டு செயலாளர் செல்வமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *