கோவையில் சிறந்த ஆரம்ப கல்வி வழங்கும் கல்வி நிறுவனமாக பால்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த (Firstcry Intellitots pre school) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் தேர்வு

கோவையில் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தொழில் முனைவோர்களுக்கான கே.ஜி.விருதுகள் வழங்கும் விழா மாநாகராட்சி கலையரங்கில் நடைபெற்றது..

Edupreneurship Excellence Award 2025 (Coimbatore Chapter) எஜூபிரனேர்ஷிப் எக்ஸலன்ஸ் அவார்டு 2025 என நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கே.ஜி.குழுமங்களின் தலைவர் மருத்துவர் பத்மஸ்ரீ பக்தவத்சலம் தலைமை தாங்கினார்..

கோவையில் சிறந்து செயல்படும் பல்வேறு துறை சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது..

நிகழ்ச்சியில், நேரு நகர் பகுதியில் செயல்படும் பால்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த (Firstcry Intellitots pre school) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் சிறந்த ஆரம்ப கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டது..

தொடர்ந்து பள்ளியின் நிர்வாக அறங்காவலர்கள் கிறிஸ்டோபர் பால் மற்றும் ஏஞ்சலின் கிறிஸ்டோபர் ஆகியோருக்கு (Best Early Learning & Development Preschool Award) விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த விருதை முன்னால் அமைச்சரும்,கிணத்துகடவு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தாமோதரன் வழங்கி இருவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்..

இந்நிகழ்ச்சியில்,முன்னாள் மாவட்ட அமர்வு நீதியரசர் பாலசந்திரன்,பாரதியார் பல்கலைகழக பொருளாதார துறை தலைவர் முனைவர் சங்கமித்ரா,இளம் தொழில் முனைவோரும்,திறன் பயிற்சியாளரும் ஆன பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்..

நேரு நகர் பகுதியில் சிறந்த மழலை பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட (Firstcry Intellitots pre school) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் முதல்வர் ஏஞ்சலின் கிறிஸ்டோபர் மற்றும் நிர்வாகத்தினர்,பள்ளி ஆசிரியர்கள்,ஊழியர்கள் விருது பெற காரணமாக இருந்த அனைவருக்கும் , பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *