பா.வடிவேல், அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரம், தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களை தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் முன்கண்டறிதல் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 02.08.2025 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, ஜெயங்கொண்டம் வட்டாரம் தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடத்தப்பட்டது.முகாமினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்துகள் அடங்கிய பெட்டகங்கள், தாட்கோ மூலம் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் உதவித்தொகை ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த உயர் மருத்துவ சேவை முகாமில் எலும்பு முறிவு, மனநலம், கண், குழந்தைகள் நலம், பொது மருத்துவம், சர்க்கரை நோயியல், காது–மூக்கு–தொண்டை, பல், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், நரம்பியல், தோல் நோய், இருதயவியல் மற்றும் கதிரியியல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவு மருத்துவர்கள் பொதுமக்களுக்கு நேரடி மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கினர்.

மேலும், எக்கோ கார்டியோகிராம், அல்ட்ராசோனோகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மற்றும் இரத்த பரிசோதனை உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டன.

இம்முகாமில் இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.மாரிமுத்து, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.மணிவண்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.பழனிசாமி, மாவட்ட நிலை அலுவலர்கள், மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் மேகநாதன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஸ்தூரி (வ.ஊ), ஆ.பிரபாகரன் (கி.ஊ) மற்றும் அரசு அலுவலர்கள்,மருத்துவர்கள்,மருத்துவ பணியாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *