செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் 190 நல்லாமூர் முகாம் தேமுதிக சார்பில் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் 2 ம் ஆண்டு நினைவு தினம்
நல்லாமூர் முகாமில் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நல்லாசியுடன் தமிழக முழுவதும் உள்ள தேமுதிக முகாம் அலுவலகத்தில் மறைந்த பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள் இலவச கண் பரிசோதனை முகாம்கள் ஏழை எளியோர் விடற்ற ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சி மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் எம்..ராஜேந்திரன் ஆலோசனைப்படி சித்தாமூர் அருகே உள்ள 190 நல்லாமூர் தேமுதிக சார்பில் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமணையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர்.
இம்மு முகாமில் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறந்த மருத்துவர்களால் கண் புரை நீக்கப்பட்டு இலவசமாக லென்ஸ் இலவச கண் கண்ணாடி
வழங்கப்பட்டது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பயன் பெற்றனர்.
பின்பு முகாமில் கலந்து கொண்ட முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முதுகரை சம்பத் வெற்றிக்காடு வி.எஸ்.சேகர் நல்லாமூர் எஸ்.ரமேஷ்
ஆகியோர் தலைமை தாங்கி முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதில் தேமுதிக முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.சீனிவாசன் இ.பாலு ஆர்.பாண்டியன் எம்.ஆறுமுகம் ஜி.சங்கர் ஏ.கோவிந்தராஜ் எம்.மகேந்திரன்
கோதண்டராமன் கோபி திருநாவுக்கரசு சிவகுமார் நாராயணசாமி தர்மன் ஆறுமுகம் சக்திவேல் ஆர்.சிவகுமார் கங்காதரன் செல்வம் பாரதிராஜா ராதா ஜெயபால் பிரபாகரன் மோகன்ராஜ் விஷால் ஆகாஷ் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.