காரமடை எஸ்.வி.ஜி வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது .
விழாவில் எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனிசாமி, தலைமை தாங்கினார்
, நிர்வாக அறங்காவலர்.லோகு முருகன், , செயலாளர் .ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி அறங்காவலர் தாரகேஸ்வரி.நிர்வாக அதிகாரி சிவசதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முதல்வர் சசிகலா வரவேற்று பேசினார்.,ஒருங்கிணைப்பாளர்கள் , சந்தியா, அனிதா, ஹேமா, மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
விழாவில் “சாண்டா கிளாஸ் ” வேடமடைந்த மாணவ மாணவிகள் புதிய எண்ணங்கள்,புதிய முயற்சிகள்,புதிய நம்பிக்கைகள்,புதிய திட்டங்கள் சேர்த்து மாற்றத்தை தேடும் மனிதனாய் மாறுங்கள், மாற்றுங்கள், என்று அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாணவ மாணவிகள் பங்கேற்ற கிறிஸ்து பிறப்பு, ஆடல் பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நடந்தது. முடிவில் ஆசிரியை நான்சி நன்றி கூறினார்.