குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் என்எல்சி ஆபிஸர் நகரை சேர்ந்த ரவணப்பன் மகன் லிங்குராமன் (49) வடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றுஇரவு வழக்கம்போல் கடையை 10 மணிக்கு மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.இதையடுத்து வழக்கம்போலஇன்று காலை 7 மணிக்குகடையை திறக்க கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் உள்ள வைத்திருந்த,நல்லெண்ணெய்,பவுடர், சோப்,வாஷிங் மெஷின் லிக்யூட் உள்ளிட்ட பொருட்களை திருடிசென்றது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அருகில் இருந்த ஊமத்துரை என்பவரின் பெட், பர்னிச்சர் மார்ட் கடையின் பூட்டை உடைத்தும் உள்ளே சென்று பார்த்த மர்ம மனிதன் அதில் பணம் ஏதும் இல்லாததால் அருகில் இருந்த மற்ற மளிகை கடை பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த 500 ரூபாய், திருடி சென்றுள்ளனர்.
மேலும் சத்திய ஞான சபை அருகில் உள்ள ஒரு டீக்கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடிக்கொண்டு இருந்த போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் திருடன் முகம் பதிவானது. இதைக்கண்ட திருடன் முகத்தை மூடிக் கொண்டு அங்கிருந்து ரூ.1500 பணத்தை திருடிசென்றான் இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
இது குறித்து வடலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகள் இணைய தளத்தில்வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.