தமிழகவேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், உறுப்பினர்,
செயலாளர், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அறிக்கை.தமிழ்நாடு முதலமைச்சர், முக ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதிஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது, வேலை நாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, கிராமங்கள்தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்ற மகாத்துமா காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியும்,நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அடிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நாசகார சதிச் செயலையும்,அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுகவையும் கண்டித்தும், சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் கடலூர் கிழக்கு மாவட்ட ‘மதச் சார்பற்ற முற்போக்குக்கூட்டணி’ சார்பில் டிசம்பர்24ந் தேதி புதன்கிழமை காலை 10. மணியளவில், கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, கடலூர், திருமுட்டம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கம்மாபுரம், கீரப்பாளையம், குமராட்சி ஆகிய 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அந்தந்த ஒன்றியங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தலைமை, முன்னிலை வகிப்பார்கள்.
அதுசமயம், ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சம்மந்தப்பட்ட. கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, சேர்ந்த திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், முன்னோடிகள், தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
“செய்தி, ஜீவா செந்தில் “