சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் எல்ஜி ரோடில் துவங்கி ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது

இந்த பேரணிக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார் மாநில பொதுச் செயலாளர் மணிராஜ் மாநில பொருளாளர் ஏ. முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலையில் பேரணி அமைதியாக நடைபெற்றது

மேலும் இந்த பேரணியில் ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும் தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூபாய் 10 ஆயிரம் சம்பளம் ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம் ரூபாய் 10 ஆயிரம் ஓய்வூதியம் பெரிய ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களாக அரசு உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணியில் பதாகைகளை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் அமைதியாக பேரணி நடந்து முடிந்தது

இந்த பேரணியில் மாநில துணைச்செயலாளர் பாண்டியராஜன் மாநில மகளிர் அணி செயலாளர் ஆர் செல்வி மாநில ஒருங்கிணைப்பாளர் பொட்டு முருகேசன் தேனி மாவட்ட தலைவர் வேல்முருகன் மாநில பொருப்பாளர் பாலசந்தர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து ஊரக வளர்ச்சி துறை ஊராட்சி செயலர்கள் பணியாளர்களும் தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சி செயலாளர்களும் ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் இயக்குபவர்கள் தூய்மை காவலர்கள் மேல்நிலைத் தொட்டி இயக்குனர்கள் கணினி ஆப்பரேட்டர்கள் மற்றும் பணியாளர்கள் பேரணியில் திரளாக கலந்து கொண்டனர்

இறுதியில் . மாநில ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையன் அவர்களிடம் கவன ஈர்ப்பு பேரணியின் அனைத்து கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *