தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்டேட் பாங்க் முன்பு தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய பாஜக அரசு கண்டித்து ஆலங்குளம் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் சார்பில் .நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் ராமசுப்பு, மாநில கலை இலக்கிய அணி துணை தலைவர் ஆலடி சங்கரய்யா, ஆலங்குளம் வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ், கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் டிகே பாண்டியன் மாநில ஒபிசி அணி துணை தலைவர் ஞான பிரகாஷ்,கலை இலக்கிய அணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மத்திய அரசின் தேர்தல் பத்திர விவகாரம் மற்றும் அதன் விவரங்களை வெளியிட மறுக்கும் பாரத ஸ்டேட் பேங்க் வங்கியை கண்டித்து
உரையாற்றி கண்டன முழக்கங்களை கூறினர்கள்
இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஏசுராஜா. பிரதாப், அருணாச்சலம், , ராஜேந்திரன்,, குணசேகரன்,
சேட் தாமஸ் , பொன்னுத்துரை, யோபு, செல்வம், முருகன் கடையம் வட்டார தலைவர், குருவன்கோட்டை செல்வகுமார், மாரியப்பன் , தினகரன்,துணை தலைவர் பாப்பாக்குடி, ராஜகோபால், தங்கராஜ் ,மாறாந்தை குமாரவேல் கடங்கனேரி ஆராய்ச்சி மணி காடுவெட்டி கனகராஜ், நல்லூர் நடராஜன் , மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குணசீலன் மாவட்ட செயற்குழு உறுப்பினர், பாலு ஆலங்குளம் தாலுகா செயலாளர், வெற்றிவேல் ,
தாலுகா குழு உறுப்பினர், சந்தனக் குமார் செயலாளர், உள்பட நகர மற்றும் வட்டார காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
இறுதியில் கலை இலக்கிய அணி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் சா.லிவிங்ஸ்டன் விமல், நன்றி கூறினார்.