பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பாலைவன நாதர் ஆலயத்தில் நடைபெற்ற 10-ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி..

இசை நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலைவனநாதர் ஆலயத்தின் 10-ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மும்பை, சென்னை, வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து இசை நாட்டிய கலைஞர்களின் திருமுறை இன்னிசை, பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பாலை இசை நாட்டிய விழா அறக்கட்டளையின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.