தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள கருணாநிதி நகர் பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிடர் மற்றும் சமூக மக்கள் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் ஆனால் அந்தப் பகுதி மக்களுக்கு இன்று வரை தமிழக அரசு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை தொடர்ந்து பல முறை ஆட்சியாளர்களிடமும் அதிகாரிகளிடமும் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்துள்ளோம் ஆனால் பட்டா வழங்க மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமையில் மண்டல துணைச் செயலாளர் வக்கீல் அர்ஜுன் மேற்பார்வையில் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்துள்ளனர். இது பற்றி மண்டல துணைச் செயலாளர் அர்ஜுன் கூறுகையில் அந்தப் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பறையர் சமூக மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர்

அங்கு குடியிருக்கும் அனைவரும் கூலி வேலை செய்து கூலித்தொழிலாளியாகவே உள்ளனர். அங்கு குடியிருக்கும் மக்களுக்கு வேறு எங்கும் சொத்துக்கள் எதுவும் கிடையாது அப்படி இருக்கையில் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கக் கூடியது உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் இல்லை என்றால் மாவட்ட அளவில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று வக்கீல் அர்ஜுன் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *