கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், இரண்டாம் நாள் காத்திருப்புப் போராட்டம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
திமுகவின் தேர்தல் அறிக்கை யில் எண் 356-இல் குறிப்பிடப் பட்டிருந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலி யுறுத்தியும், சென்னையில் செவி லியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் நோக் கில் கைது நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டதைக் கண்டித் தும் தொடங் கிய இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்தது.
தமிழ்நாடு செவிலியர்கள் ஊழியர்கள் மேம்பாட்டு சங்க மாவட்டச் செயலர் தாமரைச்செல்வி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் இரா. தமிழ், மாவட்டச் செயலர் க.சந் திரபோஸ், அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலர் மு.ஆனந்தவள்ளி, அரசு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கமாநில துணைத் தலைவர் பரமசிவன், நகராட்சி, மாநகராட்சி சுகா தார செவிலியர் சங்கத் தலைவர் மு.பஞ்சவர்ணம், நாகராஜன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கங்களின் நிர்வாகிகள் சீனிவாசன், எமிமாள் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி
பேசினர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள், 100-க்கும் அதிகமான செவிலியர் கள், அரசு ஊழியர் சங்க நிர்வாகி கள் தமிழ், நீதிராஜன் உள்ளிட்ட பலர் இந்தப் போராட்டத்தில் பங் கேற்றனர்.