விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 1963ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 62 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில் 888 மாணவ–மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் வெளிப்புறத்தில் நேற்று முன்தினம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி என்பதை மாற்றி, அரசினர் மேல்நிலைப் பள்ளி, கண்டம்ங்கலம் என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பள்ளிக்கு வள்ளலார் பெயர் நீக்கப்பட்டதைக் அறிந்த உள்ளூர் மக்கள் மற்றம் சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிமுக, பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் கண்டமங்கலம் ஒன்றிய அதிமுக., சார்ப்பில் டிச.22ம் தேதி பள்ளியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று காலை 22ம் தேதி காலை, கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அதிமுக., செயலாளர் கண்ணன் தலைமையில் பள்ளிக்கு பெயர் மாற்றப்பட்டதைக் கண்டித்து அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல் அறிந்த விக்கிரவாண்டி சரக போலீஸ் டி.எஸ்.பி., சரவணன், கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் சிவசந்திரன்,. பள்ளி தலைமையாசிரியர் ஜேவியர்சந்திரகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது டி.எஸ்.பி., சரவணன் பள்ளியின் புதிய கட்டடத்தில் வள்ளலார் பெயரை நீக்கிவிட்டு, புதிதாக அரசினர் மேல்நிலைப் பள்ளி, கண்டமங்கலம் என பொறிக்கப்பட்ட பெயர் உடனடியாக அகற்றப்பட்டுவிட்டது.

பள்ளியின் பெயர் உறுதியாக மாற்றப்படாது. ஏற்கெனவே பெயர் பெறியக்கப்பட்டு, அகற்றப்பட்ட இடத்தில், பள்ளியின் பெயர் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டமங்கலம் என்று பொறிக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று அதிமுக., வினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *