தாராபுரம் செய்தியாளர் பிரபு
குண்டடம், பொங்கலூர் பகுதிகளில் 24 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் – அமைச்சர்கள் வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில், தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் (MIDH–NHM) திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகளை நேரடியாக வழங்கும் வகையில், நடமாடும் காய்கறிகள் விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குண்டடம் மற்றும் பொங்கலூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மொத்தம் 24 நடமாடும் காய்கறிகள் விற்பனை வண்டிகள், ரூ.7 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, நடமாடும் காய்கறிகள் விற்பனை வண்டிகளை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதில், தோட்டக்கலை துணை இயக்குனர் சு.சசிகலா, மாவட்ட அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர் (வட்டாரம்) அனிதா, தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொங்கலூர்) சித்ரா பானு உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான காய்கறிகள் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் நேரடி சந்தை வாய்ப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.