திண்டுக்கல்லில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் ஜிம் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய திண்டுக்கல் மாவட்ட அளவிலான “பளு தூக்கும் போட்டி” நாயுடு மகாஜன சங்கத்தில் நடைபெற்றது.

இதில் சுமார் 300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் 60 பிரிவுகளில், 180 வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது அதிக பதக்கங்களை வென்று முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற ஜிம்மிற்கு “ஒட்டுமொத்த வெற்றியாளர் கோப்பைகள்” வழங்கப்பட்டது இது மட்டுமல்லாது ஒவ்வொரு எடை பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களுக்கு “Strong Man” விருதுகளும் வழங்கப்பட்டது.

இவ்விழாவினை திண்டுக்கல் தொழிலதிபர் ஜி.சுந்தரராஜன் துவக்கி வைத்தார். சங்க துணை ஆளுநர் அரசன் S.சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். மேலும் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் தலைவர், M.மகேந்திரன், செயலாளர் P.மணிகண்டன், திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் சிவா, செயலாளர் ஜெயக்குமார் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் செந்தில்குமார், செயலாளர் ரெங்கையா, மற்றும் சங்கத்தின் நிர்வாக செயலாளர் P.கலைச்செல்வன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள், போட்டியாளர்கள், ஜிம் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *