நாமக்கல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்த மசோதாவை கண்டித்து நாமக்கல்லில் சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம்.

      தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விபி- ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

      மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் அதனை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி நாமக்கல்லில் பூங்கா சாலையில் இன்று அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் தலைவரும், காந்தியவாதியுமான ரமேஷ் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சித்திக் ஆகியோர்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *