இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி -கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நேற்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை நீக்கிய ஒன்றிய அரசை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கமுதி திமுக வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், மத்திய ஒன்றியம் மற்றும்
பேரூர் கழகம் சார்பில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வழிகாட்டுதலின் படி,
நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், கமுதி பேரூர் கழகச் செயலாளர் பாலமுருகன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணை தலைவர் சித்ராதேவி அய்யனார்,
அவைத்தலைவர்கள் ராஜேந்திரன்,லட்சுமணன், முன்னாள் சேர்மன் பாலு, மாவட்ட பிரதிநிதிகள் பாரதிதாசன், ஜேசுராஜ், காசிலிங்கம், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் நேதாஜி சரவணன்,வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிரஞ்சீவி,
மத்திய ஒன்றிய துணைச் செயலாளர்கள் முத்துக்கிளி,தங்கப்பாண்டியன், வாட்டர்
போர்டு முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள்,
ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி முத்துவிஜயன், மதிமுக கட்சி நிர்வாகிகள், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் அய்யனார் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.