கம்பம் நகரில் அதிமுக சார்பில் பாரதரத்னா எம் ஜி ஆர் அவர்களின் 38- வது நினைவு தினத்தை மு ன்னிட்டு அமைதி ஊர்வலம், அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகர அதிமுக சார்பில் பாரதரத்னா எம் ஜி ஆர் அவர்களின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு மாவட்ட தலைவர் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி கே ஜக்கையன் முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் கம்ப நகரத் தந்தை டி.டி.சிவகுமார் தெற்கு நகரச் செயலாளர் கணபதி ஆகியோர் தலைமையில் வடக்கு நகர செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் அமைதி ஊர்வலம் புறப்பட்டு கம்பம் ஆர் எம்
டி.சி டிப்போவில் துவங்கி பிரதான வீதி வழியாக சென்று அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து கம்பம் சிக்னல் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் எம்ஜிஆரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, நகர ஒன்றிய, பேரூர் மற்றும் ஊரக அதிமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *