எம்ஜிஆரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் துறையூரில் அஇஅதிமுக நகர செயலாளர் அமைதிபாலு தலைமையில் அஞ்சலி
துறையூர் டிச-26
திருச்சி மாவட்டம் துறையூர் சிலோன் ஆபீஸ் நகர அஇஅதிமுக சார்பில்
நகர கழக செயலாளர் அ.அமைதிபாலு தலைமையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி கலந்து கொண்டு எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி,பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன்,ஒன்றிய செயலாளர்கள் காமராஜ், ராம்மோகன், செல்வராஜ்,பேரூர் கழக செயலாளர்கள் ராஜேந்திரன்,ராஜாங்கம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் அன்புபிரபாகரன், நகர அவை தலைவர் ரவிவர்மா,எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர், முன்னாள் நகர செயலாளர் கவிதை மணி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் கா. தீனதயாளன் (நகர்மன்ற உறுப்பினர்) ,மாவட்ட பிரதிநிதிகள் கண்ணதாசன், மருதமுத்து ,பொருளாளர் கருணாகரன், வழக்கறிஞர் கார்த்திகேயன், நாகராஜ், உப்பிலியபுரம் முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மனோகரன், மைவிழி , எம்ஜிஆர் இளைஞர் அணி விவேக், விவசாய அணி விஜயரங்கன், எம்ஜிஆர் இ.மா.து செயலாளர் வடிவேல், எம்ஜிஆர் மன்றம் ரவி,முத்து குமாரலிங்கம், அபி இளங்கோவன்,ஐடி விங்க் தினேஷ் மற்றும் நகர,ஒன்றிய கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்