குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு தனியாக ஓய்வு அறை, உணவு உண்ண அறை, ஆண் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் உடை மாற்றும் அறை, இல்லாத நிலையில், சங்க நிதியிலிருந்து இவைகளை அமைத்து கொள்ள கூட அனுமதி தரவில்லை.

பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இருக்கைகள், பொதுமக்களுக்கானகழிப்பிடங்கள்,வழக்கறிஞர்களுக்கான ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவில்லை.

பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நீதிபதி அனுமதி தரவில்லை. இதனை கண்டித்து ஏப். 15 முதல் நீதிமன்ற காலவரையற்ற பணி புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆர்ப்பாட்டம் நீதிமன்ற வளாகம் முன்பு தலைவர் சரவணராஜன் தலைமையில் நடந்தது. கோரிக்கைகள் வலியுறித்தியும், மாவட்ட நீதிபதிக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து தலைவர் சரவணராஜன் கூறியதாவது:

பலமுறை மாவட்ட நீதிபதியிடம் கேட்டும் பலனில்லை. நீதிமன்றத்திற்கு தேவையான பணிகளை மட்டும் செய்து கொள்கிறர்கள். எங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதுடன், உயர்நீதிமன்றம் உத்திரவிட்டாலும், உங்கள் கோரிக்கை நிறைவேற்ற முடியாது, உங்களால் ஆனதை பார்த்து கொள்ளுங்கள் என்று மாவட்ட நீதிபதி குணசேகரன் கூறினார்.

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை நீடிக்கும். மேலும் எங்கள் போராட்டம் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரத போராட்டம் என தீவிரமடையும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சங்க செயலர் நடராஜன், பொருளர் நாகப்பன், நிர்வாகிகள் ஐயப்பன், கார்த்தி, ரமேஷ், துரைசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *