தேனியில் அழகராஜா கல்வி அறக்கட்டளை 6 ஆம் ஆண்டு விழா
தேனி மாவட்டம் தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் தேனி என்.ஆர். அழகராஜா கல்வி அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு விழா இந்திய திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த மாமேதை ஏபிஜே அப்துல் கலாமின் 94வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கருணா ஆயில் மில்ஸ் அதிபர் தேனி விளையாட்டுக் கழகம் தலைவருமான எம் கருணாகரன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் தேனி நகரின் மனிதநேயச் செம்மல் லைன் டி. ராஜ்மோகன் தலைமை வகித்தார் தேனி தொழிலதிபர் லயன் கே.ஏ. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார் தேனி நகரின் ஆடிட்டர் லையன் ஆர். ஜெகதீஷ் வழக்கறிஞர் எம் கே எம் முத்துராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் பங்கேற்ற ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் என்.ஆர். அழகராஜா கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகளை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் எம்பி வழங்கினார். விழாவில் பங்கேற்ற தேனி அரண்மனை புதூர் எம் எம் பல் மருத்துவமனை மற்றும் பல்நோக்கு மருத்துவமனை அதிபர் டாக்டர் ஆர் பாஸ்கரன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் லைன் டி. செல்வ கணேசன் சில்வர் ஜூப்ளி அரிமா இ.எஸ். சீனிவாசன் தங்கத்தமிழ் அரிமா பி கண்ணன் ராஜபாளையம் தேனி ஜானகிராம் மில் குரூப்ஸ் அதிபர்கள் என் ஏ அஜய் கார்த்திக் ராஜா என்.ஏ. ஆதித்ய சிவ ராமராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை தேனியின் மூத்த பத்திரிகையாளரும் அழகுராஜா கல்வி அறக்கட்டளையின் நிர்வாகியுமான எஸ். பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்