மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ‘ரோட்டரி கிளப் ஆப் மதுரை’ சார்பில் ரூ.2,21,000 (ரூ.இரண்டு இலட்சத்து இருபத்து ஓராயிரம்) மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் ஸ்மார்ட் டி.வி.க்கள் வழங்கும் விழா ரோட்டரி கிளப் ஆப் மதுரையின் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
செயலர் செல்வகுமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி பிரேம், உதவி ஆளுநர் ராம் சுந்தர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மதுரை கிழக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் சாந்தி, மணிமாறன், பள்ளி மேலாண்மைக் குழுக் கருத்தாளர் சேது ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் களிமங்கலம், பூலாங்குளம், காந்திநகர், சின்ன மாங்குளம் பள்ளிகளுக்குக் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் தண்ணீர் கேன்களும், குன்னத்தூர், சின்ன மாங்குளம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவிக்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் மோசஸ், தலைமை ஆசிரியர்கள் ராமசாமி, லட்சுமி, ஷீலா தேவி, சீனிவாச கணேச பிரபு, ஜீவா சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவில் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், குழந்தைகள் கலந்து கொண்டனர்.