கேப்டன் விஜயகாந்த் 2 ம் ஆண்டு நினைவு தின குருபூஜை விழா.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் கிழக்கு ஒன்றியத்தில் கேப்டன் விஜயகாந்த் 2 ம் ஆண்டு நினைவு தினம் மற்றும் குருபூஜை விழா சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி
வீரவணக்கம் செலுத்தினர்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் அனகை முருகேசன் ஆகியோரின் ஆலோசனைப்படி சித்தாமூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சித்தாமூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.சந்திரகாந்த் தலைமையில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சித்தாமூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஓவியர் ஆர்.ரமேஷ் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.சக்திவேல், சந்தோஷ்குமார், கேப்டன் மன்ற செயலாளர் அன்பு, விவசாய அணி துணை செயலாளர் ஜானகிராமன்,கேப்டன் மன்ற துணைச் செயலாளர் ஆர்.செல்வராஜ் ,இளைஞர் அணி துணை செயலாளர் அசோக்,அவைத் தலைவர் நடராஜன்,விவசாய அணி செயலாளர்
எல்.சுந்தர்,மற்றும் துளசிதாஸ் கமலக்கண்ணன் மணிதர்மா செல்வம் உள்ளிட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.