மேட்டுப்பாளையம் , டிச. 30: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு என்.சி.சி 31வது அணி சார்பில் மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியில் என்.சி.சி. கூட்டு பயிற்சி முகாம் கடந்த 24ந் தேதி தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்டம் கூடலூர், அய்யங்கொல்லி, உதகை, குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் எஸ்.வி.ஜி.வி பள்ளி மாணவர்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 413 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் துப்பாக்கி கையாளுதல், ராணுவ நடைபயிற்சி, துப்பாக்கி சுடுதல், யோகா, உடற்பயிற்சி, மேப் ரீடிங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட 31 தனி அணி என்.சி.சி அமைப்பின் கமாண்டர் கர்ணல் சி.எஸ்.சித்து தலைமையில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
முதல் நாள் பயிற்சியை எஸ்.ஸி.ஜி.வி பள்ளி தாளாளர் டாக்டர் ஆர்.பழனிசாமி, முதல்வர் சசிகலா, நிர்வாக அலுவலர் சிவ சதீஸ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பயிற்சி வழங்குபவர்கள் பள்ளிக் கல்லூரியை சேர்ந்த என்.சி.சி அலுவலர்கள், ராணுவ வீரர்கள், சுபேதார் ஜலன் ஆகியோர் வழங்கி வருகின்றனர். பயிற்சி வகுப்பு வரும் 2ஆம் தேதி முடிவடைகிறது. இந்த முகாமில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.