திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூரில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைக்க வருகை தந்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் எம் எல் ஏ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்து, அதன் கட்டுமான பணி முடிந்து இன்று திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் எம் எல் ஏ திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி, வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார், மாவட்ட குழு ரங்கராஜன், செல்வராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சேகர், வலஙகை நகர செயலாளர் ராதா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.