கீழ்வேளூர் வேளாண் கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வேளாண் கள பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மண் மாதிரியை சரியான முறையில் எடுப்பது. பரிசோதனை மூலம் மண்ணில் உள்ள ஊட்டச்சத்து நிலை அறிதல்,அதனை அடிப்படையாகக் கொண்டு உரம் பயன்பாடு செய்வது போன்ற விஷயங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். பரிசோதனை செய்தால் செலவு குறைந்து, மகசூல் அதிகரிக்கும் என்பதை மாணவிகள் விளக்கினர். மாணவிகளின் விளக்கத்தை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.