சென்னை டிச : 31


சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை மேலோங்கும் இதுவரை சந்தித்த துன்பங்களும் துயரங்களும் புதிய வருடத்தில் நீங்காதா என்ற எதிர் பார்ப்பை உருவாக்கும்.
எத்தகைய சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து நமக்காக உழைக்கும் விவசாயிகளின் அர்ப்பனிப்பு, அனைத்து தொழில்துறையின் வளர்ச்சி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நாம் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.
குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும்.
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பாக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் தெரிவித்தார் , உடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சிஇஓ டாக்டர் மனோகர், சர்வதேச செயலாளர் அட்வகேட் முகமது சலீம் , மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் அகமது ரியாஸ், புதுச்சேரி மாநில தலைவர் தந்தை பிரியன், புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் மகேஸ்வராஜ், புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் சுசீந்திரகுமார் , மாநில செயலாளர் டாக்டர் பாஸ்கர், மாநில பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.