செங்கல்பட்டு மத்திய மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாள் மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கழக இளைஞரணி செயலாளரும் செங்கல்பட்டு மத்திய மாவட்ட கழக செயலாளருமான டாக்டர்எ.சதீஷ்குமார் தலைமையில் காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
எஸ்.வி.கோபிநாத் ஏற்பாட்டில் காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் திருவடிசூலம் ஊராட்சி கழக செயலாளர் மணி ஊராட்சி
பட்ரவாக்கம் ஊராட்சி கழக செயலாளர் கிருஷ்ணன் குண்ணவாக்கம் ஊராட்சி கழக செயலாளர் முருகன் ஊரப்பாக்கம் ஊராட்சி கழக செயலாளர் நீலகண்டன் ஆகிய ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அப்போது செங்கல்பட்டு மத்திய மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.