பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்ற நாதஸ்வர வித்வான் கல்யாணபுரம் ஸ்ரீ நிவாசனுக்கு பாபநாசம் ராதா கல்யாணம் குழு சார்பில் “சப்தஸ்வர சாம்ராட்” பட்டம் வழங்கி கௌரவிப்பு…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நாதஸ்வரம் இசையில் பல்வேறு பக்கங்களும், விருதுகளும் பெற்ற கல்யாணபுரம் ஸ்ரீ நிவாசனுக்கு சமீபத்தில் தமிழக அரசு இசை கலைஞர்களுக்கு வழங்கக்கூடிய கலைமாமணி விருதினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
நிலையில் தமிழக அரசால் கலை மாமணி விருது பெற்ற நாதஸ்வர வித்வான் ஶ்ரீநிவாசனுக்கு பாபநாசம் ராதா கல்யாணம் குழுவின் சார்பில்
“சப்தஸ்வர சாம்ராட் ” என்ற பட்டத்தினை குழு நிர்வாக தலைவர் ஹரிஹரன் மற்றும் குழுவினரால் வழங்கி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நாதஸ்வர வித்வான் ஶ்ரீநிவாசன் குழுவினர் இசை கலை நிகழ்ச்சி நடத்தி காண்போரை இசை மழையில் மூழ்கடித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் ராதா கல்யாணம் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.