தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்களை பெறவும் கட்சிகள் அறிவித்துள்ளன.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி முதல் சென்னை சத்தியமூர்த்தி பவனிலும், மாவட்ட கட்சி அலுவலகங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்காக போட்டியிட விருப்பம் தெரிவித்த இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அவளூர் சீனிவாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் தாமோதரனிடம் தனது விருப்ப மனுவை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *