மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
அலங்காநல்லூர்.

மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா நடைபெற்றது இந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அரியூர் ரோட்டில் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்ட நீர்மோர் பந்தலுக்குச் சென்று பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், சர்பத் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசி அவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா வழியில் சீரோடும் சிறப்போடும் கழகத்தை வழி நடத்தும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் மாபெரும் அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம் அதிமுக சார்பில் நேற்று முதல் தொடங்கி உள்ளோம்சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தில் தம்பி அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவி அம்மா இருந்த காலத்தில் மக்கள் பசிப்பிணி போக்க அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் பசியாற்றி வந்தனர்.
அவர்களது வழியில் கழகத்தை நடத்தும் எங்களின் பொதுச்செயலாளர் ஆணைக்கிணங்க அனைத்து இடங்களிலும் அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
என்று கூறினார் இதில் மாநில அம்மா பேரவை நிர்வாகிகள்
வெற்றிவேல், வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், நகர செயலாளர்கள் அழகுராஜ், அசோக்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர்லெட்சுமி, அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பஞ்சவர்ணம், சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம், முன்னால் கூட்டுறவு துணைத் தலைவர் ராகுல், மற்றும் குலமங்கலம் திருப்பதி ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்முலோகேஸ்வரன், நிர்வாகிகள் உலகநாதன், நெடுங்குளம்
தங்கமுருகன், ஹரிகிருஷ்ணன், குமாரம்பாலன், தொழிலதிபர் முத்துகிருஷ்ணன், தண்டலை ஆனந்த், கோட்டைமேடு பாலன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..