வாடிப்பட்டி
சமயநல்லூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான .குடியிருப்பு வளாக பகுதிக்கு மதுரையிலிருந்து டிராக்டரில் மாட்டு சாணம் ஏற்றி இறக்க வந்த டிரைவர் வளாகத்திற்கு செல்லும் பாதையில் மின் விளக்கு கம்பத்திற்கு முறையான. பராமரிப்பு இன்றி தரை சேதமாகி கிடந்த மின் வயரை மிதித்தபோது மின் சாரம் தாக்கியதில் டசம்பவ இடத்திலே டிராக்டர் டிரைவர் இறந்துபோனார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விராட்டிபத்து பகுதியை சேர்ந்தவர் திரவியம் 46. டிரைவர் இவர் நேற்று காலை மதுரை ஆண்டால்புரத்தில் உள்ள தனியார் குடியிருந்து வளாகத்திலிருந்து டி.ராக்டரில் மாட்டு சாணம் ஏற்றி கொண்டு சமயநல்லூர் சேம்பர் அருகில் உள்ள. தனியார் குடியிருப்பு வளாகமான சுப்ரஜாவில் பகுதி. நிலங்களுக்குமாட்டு சாணம் லோடு இறக்க சென்று உள்ளார் அப்போது வளாக பகுதியில் டிராக்டரை நிறுத்தி விட்டு திரவியம் நடந்து சென்றபோது நடபாதையோரமுள்ள மின் விளக்கு் கம்பங்ளுக்கு மின் இணைப்பு செய்யபட்ட வயர்கள் தரையில் சேதமான நிலையில் கிடந்த உள்ளது.
இதை கவனிக்காத திரவியம் வயரை காலால் மிதித்தபோது மின் சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே இறந்து போனார் இச்சம்பவம் குறித்து சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் சரவணன் சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன்.மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மின்சாரம் தாக்கி இறந்து போன டிரைவர் திரவியத்திற்கு வீரலெட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண்களும் உள்ளனர்.