கோவில்பட்டியில் எட்டையபுரம் சாலையில் உள்ள அரசு நூலகம் உள்ளது . இதன் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரப்பு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த நிலத்தில் அரசு நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும், அரசு போட்டிகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் மையம் அமைக்க வேண்டும். என்று தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் அந்த அரசு புறம்போக்கு நிலம் தங்களுடைய நிலைமை என்று முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.. வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்று உத்தரவு பிறப்பித்தது மட்டுமின்றி, ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் அந்த கட்டிடத்தை அரசு பொது சொத்து என்று அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையில் அந்தக் கட்டடத்திற்கான வரி விதிப்பினையும் நகராட்சி நிர்வாகம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் கட்டிடத்தை அகற்றி நிலத்தை கையகப்படுத்தி நூலக விரிவாக்க பணியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை என்பதால் ஜனவரி ஒன்றாம் தேதி நூலக விரிவாக்கம் செய்வதற்கான சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் சார்பில் பணிகள் தொடக்க உள்ளதாக அறிவிப்பு செய்தனர்.

அதன்படி அரசு நூலக விரிவாக்க கட்டிட பணிகள் பூமி பூஜை போடுவதற்காக சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் சம்பந்தப்பட்ட நிலத்திற்கு வந்தபோது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் அவர்களைமறித்து,, அங்குள்ள கட்டிடம் மற்றும் நிலப் பிரச்சினை தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்திருப்பதாகவும்,, மேலும் பூமி பூஜையை போட அனுமதிக்க மாட்டோம் என்று மறுத்தனர்.

எவ்வித தடை உத்தரவும் இல்லாத நிலையில் மேல் முறையீடு செய்திருப்பதாக கூறி காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது பூமி பூஜை போட போவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததை தொடர்ந்து பூமி பூஜை போட வந்த சமூக ஆர்வலர்கள் 12 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் அரசு புறம்போக்கு நிலம் என்று நீதிமன்றம் அறிவித்த நிலையில் அதை கையகப்படுத்தி அரசு நூலகத்தை விரிவாக்கம் செய்ய முடியாத அதிகாரிகளை கண்டித்தும், பூமி பூஜை போட வந்த தங்களை காவல்துறை கைது செய்ததை கண்டித்தும் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் சரவணன், ராசேசுகண்ணா, ராஜ மார்த்தாண்டம், பொன்னுசாமி , இசக்கிமுத்து ,குமார், பரமசிவம், முத்துராஜ் ,பால்ராஜ் ,செந்தில் குமார் ,முத்துராஜ் , சுதாகரன் தனியார் திருமண மண்டபத்தில் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்..

மாலையில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் விடுவித்த போதும் அவர்கள் வெளியே செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் பேச்சு வார்த்தையை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் வெளியே செல்ல சம்மதம் தெரிவித்து வெளியேறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *