திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி தமிழக முதலமைச்சராக “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்ற முதல்நாளில் பெண்கள் வாழ்வில் ஒளி விளக்கேற்றும் வகையில் விடியல் பயணம் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வழியில் தமிழக மக்களுக்கு கடமை உணா்வை தொடங்கிய நாள் முதல் கடந்த 56 மாதங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான திட்டங்களை அறிவித்து, அது முடிவுற்ற பின் தொடங்கி வைத்து மக்களுக்கான பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக துணை முதலமைச்சரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தந்தையின் வழியை பின்பற்றி எதிா்கால தலைமுறையின் நலன் கருதி பணியாற்றி வரும் நிலையில்,

சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி அகாடமி அமைக்க வேண்டும் என மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோாிக்கையை ஏற்றுக்கொண்டு அதற்கான பணிகளை துவங்க உத்தரவிட்டு, அனைவருக்கும் புத்தாண்டு பாிசாக விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகிலுள்ள கீரப்பாக்கம் பகுதியில் ரூ17 கோடி மதிப்பில் சா்வதேச அளவில் தரம் கொண்ட டிராப்ட் மற்றும் ஸ்கீட் இரட்டை குழல் துப்பாக்கி சூடும் பயிற்சி மையத்திற்கான பணிகளை மேற்கொள்ள மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துணை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் கானொளி மூலம் அடிக்கல் நாட்டினாா்.

தமிழ்நாட்டின் நலன் கருதி துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டு துறையை பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள கபடி, ஹாக்கி, கூடைபந்து, கைப்பந்து என அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் ஈடுபடும் வீராங்கணைகளை மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில இந்திய அளவில் ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தை சோ்ந்த விளையாட்டு துறையில் உள்ள பலா் சாதனை படைத்து வருகின்றனர்.

இதற்கு மேலும் வலுவூட்டும் வகையில் புதிதாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர குடும்பத்தை சாா்ந்தவா்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நிலையில், ஏழை, பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடு இல்லாமல் அனைவரும் சரி சமமாக கலந்து கொள்ளும் வகையில் இந்த மைதானம் அமைய உள்ளதால், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் பயிற்சி பெறவும், ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக கலந்து கொள்ளும் வகையில் இந்த மைதானம் அமையவுள்ளது.

வருங்காலங்களில் உலக கோப்பை நடைபெறும் வகையில் வடிவமைக்கப்பட உள்ள இந்த மைதானம் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் பெருமையை உலகளவில் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *