அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை முன்னிட்டு கால்நடை துறை சார்பாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை நடைபெற்றது.

கால்நடைத்துறை மதுரை மண்டல இணை இயக்குனர் ராம்குமார், தலைமையில்
கால்நடை மருத்துவர் சங்கரவிநாயகம் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு காளைக்கு கொம்பு, திமிலு ,பல்லு உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்தார். தொடர்ந்து மாலை வரை பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனைக்கு பின் குறிப்பேட்டில் எழுதி
பதிவு செய்யப்பட்டது.

இதில் 150 க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன கால்நடைத்துறை பணியாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *