திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயைத் தடுக்கும் வகையில் கால்நடைத் துறையின் சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இந்த முகாமில் வேளாண் கல்லூரி குழு எண் ஜந்து மாணவிகள் ஆர்த்தி, கல்பனா, லத்திகா, பவித்ரா, சங்கீதா, விஜயலட்சுமி, யோகசெளமிகா ஆகியோர் தன்னார்வலர்களாக கலந்து கொண்டனர். கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் கால்நடை விவசாயிகளிடம் நோயின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் கால்நடைத்துறை அலுவலர்களுக்கு மாணவிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். கால்நடைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், பால் உற்பத்தி இழப்பை தவிர்க்கவும் இத்தகைய தடுப்பூசி முகாம்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கால்நடைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இம்முகாமில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த கால்நடை விவசாயிகள் ஆர்வத்துடன் பயனடைந்தனர்.