கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ.பங்களா பகுதியில் கடந்த மாதம் 6 ஆம் தேதி வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ரஜபுல்அலி ஷாஜிதா ஆகியோரின் 5 வயது மகன் சைஃபுள் ஆலனை சிறுத்தை கல்விச் சென்று கொன்றது இச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ள நிலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்

இந்நிலையில் அங்கு சிறுத்தை மீண்டும் நடமாடி வருவதை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தற்போது இரண்டு கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர் மேலும் அச்சுறுத்தி வரும் சிறுத்தை கூண்டில் சிக்கினால் தான் நிம்மதி என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *