திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் (Women Advocates Association – WAA) தேர்தலை சுமுகமாகவும், ஒழுங்காகவும் நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் குழு சார்பில், தேர்தலில் பங்கேற்க விரும்பும் தகுதியுள்ள பெண் வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் அண்மையில் எடுக்கப்பட்ட வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் அலுவலக வளாகத்தில் செயல்படும் தற்காலிகக் குழுவிடம், நவம்பர் 20ஆம் தேதி முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
தமிழ்நாடு பார் கவுன்சில் வழங்கிய வழக்கறிஞர் பதிவு சான்றிதழ்.
ஆதார் அட்டை நகல். COP சான்றிதழ் (இருந்தால்).

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நவம்பர் 30ஆம் தேதி பிற்பகல் 3 மணி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வரும் தகுதியுள்ள அனைத்து பெண் வழக்கறிஞர்களும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, தேர்தல் சுமுகமாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தற்காலிகக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.இந்தத் தேர்தல், மாண்புமிகு உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் நீதிபதி ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி நடைபெறுகிறது. தற்காலிகக் குழுவின் முடிவே இறுதியானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகக் குழு உறுப்பினர்கள்:

ஏ. ராஜேந்திரன்
எம். லட்சுமணன்
ஏ. மனோகரன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *