திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் விவசாய நிலத்தில் சுமார் 17 அடி நிலமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.
இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து மீட்டனர்.
பின்னர் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை ஏலகிரி மலைப்பகுதிக்கு கொண்டு சென்று அங்கு பாதுகாப்பாக விட்டனர்.
இளைஞர்கள் மலைப்பாம்பை எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் மீட்டு, அதன் இயற்கையான வாழ்விடத்தில் விட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.