மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களது பிறந்த நாளை தமிழகத்தில் உள்ள அவரது கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமத்தில் காவேரிப்பட்டினம் ஒன்றியம் திமுக சார்பில் கலைஞர் அவர்களது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

இதில் அகரம் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி தலைமை வகித்தார், இதில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஏ.சி. சண்முகம்,ஒன்றிய துணைத் செயலாளர் தட்டரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் நாகபுஷணம், பாலமுருகன், ஒன்றிய குழு உறுப்பினர் அமிர்தம் கருப்பண்ணன், ஆவத்துவாடி ஊராட்சி மன்ற துணை தலைவர் முரளி, சத்யராஜ், ராமதாஸ் அருள், சக்கரவர்த்தி, ராஜா, வெற்றிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

இதில் கலைஞர் அவர்களது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இதில் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *