அண்ணா திமுக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று, கருத்து கணிப்புகளை தூக்கி எறிந்து விட்டு வாக்கு எண்ணிக்கையின் போது செயல்பட வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் அறிவுரை

முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான கழக பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் கழக அமைப்பு செயலாளரும் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா. காமராஜ் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது

ஆலோசனைக் கூட்டத்தில் தலைமையேற்று பேசிய முன்னாள் அமைச்சர் இரா காமராஜ்

நாகை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை சுர்சித் சங்கர்தான் வேட்பாளர் என்று இல்லை வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் நீங்கள் ஒவ்வொரு வரும் வேட்பாளர் என எண்ணி செயல்பட வேண்டும்

கருத்துக் கணிப்புகளை தூக்கி எறிந்து விட்டு வாக்கு எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்

உற்சாகமாக உள்ளே செல்வது வெளியே வரும் பொழுதும் வர வேண்டும் ஏனென்றால் அண்ணா திமுக வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று

உங்களது கவனத்தை திசை திருப்ப திமுகவினர் முயற்சி செய்வார்கள் அதில் அவர்கள் கில்லாடிகள் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வாக்கு எண்ணிக்கையின் போது செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்

ஆலோசனை கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சுர்ஜித் சங்கர் மாவட்ட கழகப் பொருளாளர் ஏ என் ஆர் பன்னீர்செல்வம் மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகி ராம் நகரக் கழக செயலாளர்கள் திருவாரூர் திருவாரூர் ஆர் டி மூர்த்தி திருத்துறைப்பூண்டி சண்முகசுந்தர் கூத்தாநல்லூர் ராஜசேகர் நாகை தங்கக் கதிரவன் நன்னிலம் பக்கிரிசாமி ஒன்றிய கழக செயலாளர்கள் திருவாரூர் தெற்கு மணிகண்டன் வடக்கு செந்தில் வேல் திருத்துறைப்பூண்டி சிங்காரவேலு கோட்டூர் ராஜா சேட்டு கொரடாச்சேரி சேகர் மன்னார்குடி தமிழ் கண்ணன் குடவாசல் ஒன்றிய குழு தலைவர் கிளாரா செந்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எம் ஆர் பாலாஜி உள்பட நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாரூர் திருத்துறைப்பூண்டி நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *