தேனி லோக்சபா தொகுதியில் இதுவரை போட்டியிட்ட வேட்பாளர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் எம்பி தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி

இதில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 493 வாக்குகள் பெற்று லோக்சபா தொகுதியில் அதிக வாக்குகளை வாங்கி பொதுமக்களின் அமோக ஆதரவோடு வெற்றி லோக்சபா தொகுதி வரையறைக்கு பிறகு கடந்த 2008 ஆண்டு முதல் தேனி லோக்சபா தொகுதியாக புதிதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது

தொகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற அண்ணா திமுக வேட்பாளர் ஆர். பார்த்திபன் 5
லட்சத்தி 71 ஆயிரத்து 254 வாக்குகள் பெற்றது

கடந்த 2019 இல் நடைபெற்ற தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வத்தின் மகன் ஒ.பி ரவீந்திரநாத் 5 லட்சத்தி 4 ஆயிரத்து 813 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற போதிலும் பார்த்திபன் பெற்ற வாக்குகளின் இந்த நிலையில் தற்போதைய லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பார்த்திபன் ரவீந்திரநாத் இவர்களை விட அதிக வாக்குகள் பெற்று லோக்சபா எம் பி ஆக வெற்றி படைத்துள்ளார்

இதன்படி லோக்சபா தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து அதிக வாக்குகள் பெற்ற பெருமையை எம்பி தங்க தமிழ்ச்செல்வன் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது பெரியகுளம் லோக்சபா தொகுதியாக இருந்தபோது இவ்வளவு அதிக வாக்கு எண்ணிக்கையில் எந்த வெற்றி வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *