ராஜபாளையம் அருகே விசைதறி தொழிலாளி அடித்துக் கொலை!-பூச்சி கொல்லி மருந்தை அவர் மீது தெளித்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய பக்கத்து வீட்டு இளைஞர் கைது!

ராஜபாளையம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்தவர் சதீஷ்( 48.)விசைத்தறி. தொழிலாலியான இவர் ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தை அடுத்து உள்ள கிழவன் கோவில் கிராமத்தில் அழகேந்திரன் என்பவரது வீட்டில் தனியாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்

இவரது குடும்பத்தினர் கேரளாவில் இருப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில் அதே பகுதியில் புதிய ராஜ் என்பவர் பக்கத்து வீட்டில் குடியிருந்து வருகிறார்

புதிய ராஜியின் மனைவி மகாலட்சுமி குறித்து சதீஷ் அவதூறாக பேசியுள்ளார்.இதில் ஆத்திரமடைந்த மகாலட்சுமியின் மகனான ஜயப்பன் (20) சதீஷை கம்பால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலையில் அடிபட்டு சதீஷ் இறந்து விடவே கொலையை மறைக்க நினைத்த ஜயப்பன் சதீஷ் உடல் மீது பூச்சி கொல்லி மருந்தை தெளித்துவிட்டு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார் .

தகவல் கிடைத்தவுடன் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சதீஷின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனையில் அவர் கம்பால் தலையில் தாக்கப்ட்டு இறந்தது தெரிய வரவே பக்கத்து வீட்டுக்காரனான ஜயப்பனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவரது தாயாரை சதீஷ் அவதூறாக பேசியதால் கம்பால் சதீஷை கம்பால் தாக்கியதாகவும் எதிர்பாரதவிதமாக அவர் இறந்துவிட்டதாகவும் போலிசில் மாட்டிக்கொள்ளக்கூடாது

என்றுநினைத்து சடலத்தில் பூச்சி கொல்லி மருந்தை தெளித்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. ஐயப்பனை கைது செய்த போலீசார்அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரளாவில் உள்ள சதீசின் குடும்பத்தினருக்கும் தகவல் தரப்பட்டு அவர்களும் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *