தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே விடுமுறையில் சொந்த ஊர் திரும்பிய காவல் துறை நிருபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் உறவினர்களிடேயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியதுரை
இவர் கோவை காவல் டிஐஜி அலுவலகத்தில் செய்தியாளராக பணி செய்து வருகிறார் இவர் பேருந்து மூலம் சொந்த ஊரான குருக்கள் பட்டிக்கு வந்துள்ளர்
இவர் நண்பர்கள் இருவர் அழைத்து கொண்டு சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி காட்டுக்குள் அழைத்து சென்று இருவரும் சேர்ந்து
காவலர் பெரியத்துரையை அறிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர் .
தகவலறிந்து விரைந்து வந்த சின்ன கோவிலாங்குளம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்துள்ளர்.
மேலும் இது குறித்து ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் காவலரையே படுகொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடேயே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.