திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்-மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு;-
தென்காசி மாவட்டத்தில் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் விலக்கம் செய்யப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை
தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் 2024ம் ஆண்டு பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அமுல்படுத்தப்பட்டு 06.06.2024 அன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தால் விலக்கம் செய்யப்பட்டுள்ளதால்மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரதி வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் திங்கட்கிழமை (10.06.2024) அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரிடையாக அளிக்கலாம்
என தெரிவித்துள்ளார்.